உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சுகாதார நிலைய கட்டடம் சேர்மன் ஆய்வு

சுகாதார நிலைய கட்டடம் சேர்மன் ஆய்வு

மரக்காணம்: மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சேர்மன் ஆய்வு செய்தார்.மரக்காணம் அடுத்த கொளத்துார் ஒன்றிய துவக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் துவக்கி வைத்தார். தொடர்ந்து பிரம்மதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கட்டடத்தின் மேல் பகுதிகளில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது.மழைக் காலங்களில் மருத்துவமனைக்குள் தண்ணீர் சொட்டுகின்றது. இதனால், நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.இது குறித்து சேர்மன் தயாளன், துணைச் சேர்மன் பழனி மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின் அங்கு பணியில் இருந்த டாக்டர், செவலியர்கள் மற்றும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை