| ADDED : ஜூன் 26, 2024 11:04 PM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை கூட்டம் நடத்தினார் .விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறுகிறது. நேற்றுடன் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவது முடிந்து சின்னம் ஒதுக்கீடும் நடந்தது. இந்நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி நேற்று தொகுதி தேர்தல் அலுவலகத்தில் இடைத்தேர்தல் தபால் வாக்குகள் பெறுவது குறித்தும் ,ஓட்டுச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், நேர்முக உதவியாளர்கள் தமிழரசன், முருகேசன்,துணை ஆட்சியர்கள் முகுந்தன், ஜெகதீஸ்வரன்,பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் யுவராஜ், தனிதாசில்தார் கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.