மேலும் செய்திகள்
நாளை மின்தடை
1 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
1 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
1 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
1 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பழனி தலைமை வகித்தார். சமூக நல அலுவலர் ராஜம்பாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ்வரன் முன்னிலை வகித்து ஆலோசனை வழங்கினர். கலெக்டர் பழனி கூறியதாவது: அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவிகளின் கல்வி இடைநிற்றலை தவிர்த்திடும் விதமாக, உயர்கல்வி திட்டத்தின் கீழ் 'புதுமைப்பெண் திட்டம்' மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.அதனடிப்படையில் கடந்த , 2021-24 கல்வி ஆண்டுகளில் 76 கல்லுாரிகளில் பயிலும் 8,016 மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்க உள்ளது.இந்த கல்வியாண்டில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவிகளின் நலன் கருதி, கல்லுாரி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பதியும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் கல்லூரி மாணவிகளின் ஆதார் எண், வங்கி கணக்கில் அவர்களின் தொலைபேசி எண்ணுடன் இணைந்துள்ளதையும், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகளில் மட்டுமே மாணவிகள் வங்கி கணக்கு வைத்திருப்பதையும், அனைத்து கல்லுாரி முதல்வர்களும் உறுதிப்படுத்த வேண்டும்.மேலும் www.pudhumaipenn.tn.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் கல்வி நிறுவனங்கள் பதிவு செய்யலாம். 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். திட்டத்தில் தகுதியான மாணவிகள் விடுபடாமல், அலுவலர்கள் செயல்படுத்த வேண்டும் என்றார். துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago