மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
9 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
10 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
10 hour(s) ago
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
10 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரத்தில் வி.ஐ.பி., பகுதிகளை மட்டும் நகராட்சி அதிகாரிகள் துாய்மையாக வைத்துக் கொள்வதாக கவுன்சிலர்கள் புலம்புகின்றனர்.விழுப்புரம் நகரில், நகராட்சிக்குட்பட்டு 42 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு பணிகள் மட்டுமின்றி பாதாள சாக்கடை அடைப்பு சரி செய்தல், குடிநீர் பிரச்னை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் நகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு, மாற்று கட்சிகளான பா.ம.க., - பா.ஜ., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ள வார்டுகளில், நகராட்சி அதிகாரிகள் எந்தவொரு அடிப்படை பணிகளையும் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.மேலும், அமைச்சர், எம்.எல்.ஏ., மற்றும் அரசு அதிகாரிகள் போன்ற வி.ஐ.பி.,க்கள் உள்ள பகுதிகளை மட்டும் எப்போதும், நகராட்சி அதிகாரிகள் துாய்மையாக வைத்தும் கொள்ளும் பணிகளை மேற்கொள்வதில் தீவிம் காட்டுகின்றனர்.இந்த பகுதிகளில் தினந்தோறும் துப்புரவு பணிகளை செய்வதோடு, பிளீச்சிங் பவுடர் போடுவது மட்டுமின்றி, அங்குள்ள சாலைகளில் தண்ணீர் கூட தேங்காத வகையில் கவனமாக பார்த்து கொள்கின்றனர். ஆனால், சாமானிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை. இதனால், ஆளுங்கட்சி மட்டுமின்றி மாற்று கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கூட, ஓட்டு போட்ட மக்களுக்கு பதிலளிக்க முடியாமல் புலம்புகின்றனர்.
9 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago