உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கலை கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு நாளை கவுன்சிலிங்

அரசு கலை கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு நாளை கவுன்சிலிங்

விழுப்புரம், : விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை நடக்கிறது.விழுப்புரம் அரசு கலை கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு :விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையின் முதற்கட்டமாக சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களான விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவம், தேசிய மாணவர் படை ஆகியோருக்கான கலந்தாய்வு நாளை (29ம் தேதி) நடக்கிறது.இந்த கலந்தாய்வு விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் நடக்கவுள்ளது. இதில், பங்கேற்கவுள்ள மாணவர்கள் உரிய கட்டணம் மற்றும் மூல சான்றிதழ்கள், நகல்களோடு காலை 10.00 மணிக்கு இந்த பள்ளிக்கு வந்து பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி