உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரூ.4.26 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்; திருவெண்ணெய்நல்லுாரில் கலெக்டர் ஆய்வு

ரூ.4.26 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்; திருவெண்ணெய்நல்லுாரில் கலெக்டர் ஆய்வு

திருவெண்ணெய்நல்லுார் 1-: திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி பகுதியில் 5 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட சின்ன செவலை ஊராட்சியில், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணியை கலெக்டர் பழனி நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார்.அப்போது, கட்டுமானப்பணிக்கு பயன்படுத்தும் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, காந்திகுப்பம் அரசு துணை சுகாதார நிலையத்தில் உள்ள நலவாழ்வு மையத் தினை பார்வையிட்டு, வருகைப்பதிவேடு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்து மற்றும் மாத்திரை இருப்புகள் குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையத்திற்கான துணைக் கட் டடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.பின், திருவெண்ணெய் நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட கஸ்துாரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளியில் 1.16 கோடியில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி தலைவர் அஞ்சுகம் கணேசன், தாசில்தார் ராஜ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ