உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மீண்டும் அமைச்சரான பொன்முடிக்கு திண்டிவனம் நிர்வாகிகள் வாழ்த்து

மீண்டும் அமைச்சரான பொன்முடிக்கு திண்டிவனம் நிர்வாகிகள் வாழ்த்து

விழுப்புரம்: மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடிக்கு திண்டிவனம் தி.மு.க.,நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி, நேற்று முன்தினம் ராஜ்பவனில், கவர்னர் ரவி, பொன்முடிக்கு உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.பதவியேற்ற பிறகு விழுப்புரத்திற்கு நேற்று வந்திருந்த பொன்முடிக்கு, திண்டிவனத்தை சேர்ந்த தி.மு.க.,நிர்வாகிகள் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.இதில், விழுப்புரம் மாவட்ட தி.மு.க.,இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், துணை அமைப்பாளர்கள் வழக்கறிஞர் ரமேஷ், விஜயகுமார், அண்ணாமலை உதயகுமார், ஒப்பந்ததாரர் நந்தகுமார், திண்டிவனம் நகராட்சி கவுன்சிலர்கள் டி.டி.ஆர்.ரேகாநந்தகுமார், பார்த்தீபன், பரணிதரன், சத்தீஷ், சுதாகர், மாவட்ட பிரதிநிதி முருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை