உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., மக்கள் நலன் காக்கும் அரசு மா.செ., கவுதம சிகாமணி பெருமிதம்

தி.மு.க., மக்கள் நலன் காக்கும் அரசு மா.செ., கவுதம சிகாமணி பெருமிதம்

விக்கிரவாண்டி : 'மக்கள் நலன் காக்கும் அரசாக தி.மு.க., உள்ளது' என மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி பேசினார்.விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியம், முட்டத்துார், மண்டகப்பட்டு, நந்திவாடி, தென்பேர், டி.புதுப்பாளையம், வேம்பி, நரசிங்கனுார், வேலியேந்தல், குண்டலப்புலியூர் உள்ளிட்ட கிராமங்களில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு ஓட்டு சேகரித்து பேசுகையில், 'கடந்த 3 ஆண்டுகளில் தொகுதியிலுள்ள வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது. மகளிர் உரிமைத் தொகை, புதுமை பெண் திட்டம், இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகின்ற அரசு தி.மு.க., அரசு. மக்கள் நலன் காத்திடும் அரசுக்கு, இத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டுகிறேன்' என்றார்.ஒன்றிய துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, கண்காணிப்பு குழு எத்திராசன், கலைச்செல்வன், துணைத் தலைவர் ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தமிழ்மணி, அரசு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் விஸ்வநாதன்.திருக்கழுகுன்றம் பேரூராட்சி சேர்மன் யுவராஜ், காஞ்சிபுரம் மாவட்ட சேர்மன் மனோகரன். ஜபருல்லா, வந்தே மாதரம், ஸ்ரீ பெரும்புத்துார் ஒன்றிய சேர்மன் கருணாநிதி ஒன்றிய செயலாளர் கோபால், பேரூராட்சி செயலாளர் சதீஷ், ஒன்றிய துணைச் செயலாளர் புனிதா , கிளைச் செயலாளர்கள் ராமமூர்த்தி, சண்முகம், வேலவன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கில்பர்ட்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ