உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போக்சோ வழக்கில் விவசாயி கைது

போக்சோ வழக்கில் விவசாயி கைது

விழுப்புரம்: சிறுமியை கர்ப்பிணியாக்கிய விவசாயி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.விக்கிரவாண்டி அடுத்த கலிங்கமலை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 40; விவசாயி. திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இவர், கடந்தாண்டு செங்கல் சூளையில் வேலை பார்த்தார். அப்போது, அங்கு வேலை பார்த்த தாயுடன் வந்திருந்த 10ம் வகுப்பு வரை படித்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் நெருங்கிப் பழகியதில் சிறுமி கர்ப்பமானார்.புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு கடந்த 18ம் தேதி குழந்தை பிறந்தது.இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நேற்று இரவு அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ