உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மழையால் நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை

மழையால் நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை

விழுப்புரம்: காணை அருகே பல ஏக்கர் பரப்பளவில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் முற்றிலுமாக வீணாகியது.விழுப்புரம் அடுத்த காணை, குப்பம், வைலாமூர், மாம்பழப்பட்டு உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் நெற் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கன மழையால், இந்த நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது.இதில், சில விவசாயிகள் நீரை வெளியேற்றும் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். இருந்த போதிலும் கூட தண்ணீர் வடியாமல் நெற்பயிர்கள் மூழ்கிய நிலையில் இருந்த பயிர்கள் சேதமாகியது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'மழை தொடர்ந்து பெய்ததால், அறுவடைக்கு தயாராக இருந்த நெல்களும் சேதமாகியுள்ளது. நிலத்தில் நெல் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது' என்று வேதனையோடு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்