உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போக்குவரத்திற்கு இடையூறாக மீன் கடைகள்; திண்டிவனம் நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

போக்குவரத்திற்கு இடையூறாக மீன் கடைகள்; திண்டிவனம் நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

திண்டிவனம் : திண்டிவனத்தில் சாலையோரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மீன் கடைகளை அகற்றுவதற்கு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டிவனம் நகராட்சி சார்பில், ஓ.பி.ஆர்.பூங்கா அருகே மலர் அங்காடிக்கு பக்கத்தில் மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த இடம் குறுகிய இடத்தில் இருப்பதால், போதுமான மீன் கடைகள் போடுவதற்கு இடமில்லை.இதன் காரணமாக திண்டிவனத்தில் பல இடங்களில் சாலையோரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக மீன் கடைகள் போடப்பட்டுள்ளது. மரக்காணம் கூட்ரோடு, செஞ்சி ரோடு தண்ணீர் டேங்க் அருகே என பல இடங்களில் மீன் கடைகள் செயல்படுகிறது.இதில் செஞ்சி ரோட்டில், நகராட்சி கமிஷனர் பங்களாவிற்கு பின்புறம், சாலையை ஆக்கிரமித்து மீன்கடைகள் உள்ளதால், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மீன் கழிவுகளை அங்கேயே கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரசீர்கேடு ஏற்படுகிறது.நகராட்சி சார்பில் அங்குள்ள மீன் கடைகளை அப்புறப்படுத்தும் வகையில், மீன் கடைகள் வைக்கும் இடத்தில் பள்ளம் தோண்டி, மரக்கன்றுகளை நட்டு வைத்தும், தொடர்ந்து அந்த இடத்தில் போக்குவரத்திற்கும், சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சாலையோர மீன் கடைகள் தொடர்கிறது.பொது மக்களுக்கும் சுகாதார சீர்கேட்டையும், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சாலையோர மீன்கடைகளை அப்புறப்படுத்துவதற்கு நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை