உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி வார சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடு விற்பனை

செஞ்சி வார சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடு விற்பனை

செஞ்சி: செஞ்சி வார சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறும். நேற்று நடந்த பக்ரீத் பண்டிகைக்கான சிறப்பு சந்தைக்கு மாவட்டத்தைச் சேர்ந்தோர் மட்டுமன்றி திருச்சி, வேலுார், சித்துார், தர்மபுரி பகுதிகளில் இருந்து வியாபாரிகள் 5,000க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.பெங்களூரு, சென்னை, ஈரோடு, மதுரை பகுதியில் இருந்தும், பக்ரீத் பண்டிகையன்று ஏழைகளுக்கு இறைச்சியை தானமாக கொடுக்க நுாற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஆடு வாங்க வந்திருந்தனர். இதனால் வழக்கத்தை விட விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.வழக்கமாக இச்சந்தையில் வெள்ளாடுகளுக்கே கிராக்கி இருக்கும். இந்த முறை திருச்சி, சித்துார் பகுதியில் இருந்து வந்திருந்த வெள்ளை செம்மறி ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.ஆடுகளின் எடையைப் பொறுத்து ரூ. 6,000 முதல் 20 ஆயிரம் வரை விற்பனையானது. 6 மணி நேரம் நடந்த சந்தையில் ரூ. 5 கோடிக்கு அதிகமாக விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி