அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை போராட்டம்
விக்கிரவாண்டி: தமிழ்நாடு அரசு பணியாளர்சங்கத்தினர் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் முன், நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மணிக்கண்ணன், ஏகாந்தவாசன், சுப்ரமணியன், ஜெயக்குமார், தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் வீரப்பன் வரவேற்றார்.பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரியும், தொகுப்பு ஊதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன் வாடி, டாஸ்மாக், ரேஷன் கடை பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள் உள்ளிட்ட பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் மனித சங்கிலி போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாநில இணை பொதுச் செயலாளர்கள் பாலசுப்ரமணியன், சிவக்குமார், மாநில செயலாளர் அப்பாதுரை, மாவட்ட தலைவர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர். அருள்ஜோதி நன்றி கூறினார்.