உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காதலன் இறந்த துக்கம் காதலி தற்கொலை

காதலன் இறந்த துக்கம் காதலி தற்கொலை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே காதலன் இறந்த துக்கத்தில், கல்லுாரி மாணவி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நாமக்கல் அடுத்த உள்ள பள்ளிபாளையம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகள் விஜயலட்சுமி, 20; விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் பாரா மெடிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, விஜயலட்சுமியின் காதலனான சேலம், வீராணத்தை சேர்ந்த வினோத் என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தார். காதலன் இறந்த துக்கத்தில் இருந்த விஜயலட்சுமி, முண்டியம்பாக்கத்தில் தங்கியிருந்த வீட்டில், கடந்த 21ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.அவரை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் கோயம்புத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு நேற்று மாலை இறந்தார். விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை