மேலும் செய்திகள்
பொறுப்பேற்பு
13-Aug-2024
திண்டிவனம், : தனியாக சுற்றித்திரிந்த பெண் குழந்தையை திண்டிவனம் போலீசார், பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.வீடூர் அருகே தனியே சுற்றித்திரிந்த பெண் குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின், அதேகொம் பெண்கள் கண்ணிய மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில், இந்த குழந்தையை காணவில்லை என மயிலம் போலீசாரிடம் பெற்றோர் புகார் கொடுக்க வந்த தகவல் தெரியவந்துள்ளது.பின், திண்டிவனம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசி, அதேகொம் பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, தென்னகம் டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் பாலமுருகன் ஆகியோர்முன்னிலையில், பெண் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
13-Aug-2024