உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தந்தை இறந்த நிலையிலும் தேர்வு எழுதியவர் 514 மதிப்பெண்

தந்தை இறந்த நிலையிலும் தேர்வு எழுதியவர் 514 மதிப்பெண்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே சாலை விபத்தில் தந்தை இறந்த நிலையிலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவி 514 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கருவேப்பிலைபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராயலு. மிளகாய் வியாபாரி. இவரது மகள் அனிதா, 17; இவர், சரவணம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்தார்.இவர், தேர்வு எழுதி வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி ஆங்கில தேர்வு அன்று அனிதாவின் தந்தை சுப்புராயலு கார் மோதி இறந்தார். தந்தை இறந்த நிலையிலும், அனிதா தேர்வு எழுதினார்.இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் மாணவி அனிதா 514 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண் விபரம்:தமிழ் 99, ஆங்கிலம் 63, வரலாறு 77, பொருளாதாரம் 91, வணிகவியல் 93, கணக்குப் பதிவியல் 91 என 600க்கு 514 மதிப்பெண் பெற்றுள்ளார்.இதுகுறித்த அந்த மாணவி கூறுகையில், 'குடும்ப சூழல் காரணமாக என்னால் மேல்படிப்பு தொடர முடியுமா என தெரியவில்லை. மேல் படிப்பை தொடர அரசு உதவ வேண்டும்' என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ