உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு மருத்துவமனையில் மனிதநேய பிரிவு துவக்கம்

அரசு மருத்துவமனையில் மனிதநேய பிரிவு துவக்கம்

விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மருத்துவ மனிதநேய பிரிவு துவக்க விழா நடந்தது.கல்லுாரி டீன் ரமாதேவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் நாராயணசாமி மருத்துவ மனிதநேய பிரிவை துவக்கி வைத்தார். பின், மனிதநேய மருத்துவ கையேடு வெளியிட்டு பேசினார்.விழாவில், சென்னை மருத்துவக் கல்லுாரி மருத்துவ துறை பேராசிரியர் ரகு ஆனந்தன், செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் அனிதா, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், கல்லுாரி துணை முதல்வர் தரணி, மருத்துவ கண்காணிப்பாளர் மகேந்திரன், துறை தலைவர் கீதாஞ்சலி, டாக்டர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை