உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொன்முடி மீதான குவாரி வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாட்சியம்

பொன்முடி மீதான குவாரி வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாட்சியம்

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான குவாரி வழக்கில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் சுப்பிரமணியன் நேற்று சாட்சியம் அளித்தார்.விழுப்புரம் அடுத்த பூத்துறை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில், மொத்தமுள்ள 67 சாட்சிகளில், 50 பேர் விசாரிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.நேற்றைய விசாரணையில், முன்னாள் கலெக்டரும், தற்போதைய தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினரான சுப்பிரமணியன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.அப்போது அவர், தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ., ஆகியோர் விசாரித்து அனுப்பிய கோப்புகளை மட்டுமே ஆய்வு செய்ததாக சாட்சியம் அளித்தார்.அதனை பதிவு செய்த நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ