உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விழுப்புரம்: சுதந்திர தின விடுமுறையையொட்டி விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வணிக நிறுவனங்களில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.அப்போது, தேசிய விடுமுறை தினமான நேற்று சட்ட விதிகளின் கீழ் பணியாளர்களக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமலும், மாற்று விடுமுறை அளிக்காமலும், முறையான அறிவிப்பு வழங்கி அனுமதி பெறாமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.இரு மாவட்டங்களிலும் 134 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 65 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, இந்த நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை