உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இருவருக்கு கத்திவெட்டு கூலித் தொழிலாளி கைது

இருவருக்கு கத்திவெட்டு கூலித் தொழிலாளி கைது

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே தகராறை தடுத்தவர்களை வெட்டிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கெடார் அடுத்த தர்மாபுரியைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 64; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தா, 60; நேற்று காலை கலியபெருமாள், தனது மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறு செய்தார். அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த முத்தாள், 45; வீரப்பன் மனைவி பத்மா, 45; ஆகிய இருவரும் தடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த கலியபெருமாள், இருவரையும் கத்தியால் வெட்டினார். பலத்த காயமடைந்த இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப் பதிந்து கலியபெருமாளை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்