உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வழக்கறிஞர்கள் மறியல்: விழுப்புரத்தில் பரபரப்பு

வழக்கறிஞர்கள் மறியல்: விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம் : மூன்று குற்றவியல் சட்டங்களை சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யததை கண்டித்து விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்திய தண்டனை சட்டத்தை 'பாரதிய நியாய சன்ஹிதா' என்றும், குற்றவியல் நடைமுறை சட்டத்தை 'பாரதிய நாகரிக சுரக்ஷா சன்ஹிதா' என்றும், இந்திய சாட்சிய சட்டத்தை 'பாரதிய சக்ஷ்ய அதிநியாயம்' என்றும் மத்திய அரசு, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்து அமலுக்கு கொண்டு வந்துள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனே திரும்ப பெறக்கோரியும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள், நேற்று முன்தினம் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.இந்த நிலையில், நேற்று காலை 10:15 மணிக்கு, இந்த கோரிக்கையை வலியுறுத்தி விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வழக்கறிஞர் சங்கத் தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் பாலகிருஷ்ணன், பன்னீர்செல்வம், சங்கரன் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் எதிரே 10:30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, 3 குற்றவியல் சட்டங்களை சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்ததை கண்டித்தும், இதை உடனே திரும்பப் பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால், விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு சென்று மறியல் செய்த வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பேரில், 10:45 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்தனர். இதன் பின், போக்குவரத்து அங்கு சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி