உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண் குழந்தையுடன் சென்ற இரண்டு பெண்கள் மாயம்

பெண் குழந்தையுடன் சென்ற இரண்டு பெண்கள் மாயம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆதார் பதிவுக்கு சென்ற ஒரு பெண் குழந்தையுடன், இரண்டு பெண்கள் காணாமல் போனது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த ஒட்டன்காடுவெட்டியைச் சேர்ந்தவர் திருமலை, 39; இவரது மனைவி சரஸ்வதி, 27; மைத்துனர் ஆகாஷ் மனைவி புவனேஸ்வரி, 22; நேற்று முன்தினம் காலை 11;)0 மணிக்கு, சரஸ்வதி தனது மகள் வேல்விழிக்கு, 4; ஆதார் அட்டை பதிவு செய்வதற்காக புவனேஸ்வரியுடன் விழுப்புரம் சென்றார். ஆனால், மூன்று பேரும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.திருமலை அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை