| ADDED : ஆக 15, 2024 05:40 AM
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் குறுமைய செஸ் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.கண்டாச்சிபுரம் குறுமைய செஸ் போட்டிகள் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 11, 14, 17, 19 ஆகிய நான்கு வயது பிரிவு மாணவ, மாணவிகளுக்கு செஸ் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சித்தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பி.டி.ஏ., தலைவர் நடராஜன்,பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் தனிகாம்பாள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். குறுமைய செஸ் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.போட்டிகளை உடற்கல்வி இயக்குனர் சுரேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜான்சன்,அமரன்,அமலோற்பவமரி,கவிதா ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.போட்டிகளில் முதல் அரண்டு இடங்களைப் பெற்ற மாணவர்கள் அன்பரசன், தரணிதரன் ஆகியோர் மாவட்ட அளவிளானப் போட்டியில் பங்கேற்க தேர்வாகினர். ஆயந்துார் உடற்கல்வி ஆசிரியர் ஜான் ஜெயசீலன் நன்றி கூறினார்.