உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குஷ்பூ பாட்டு பாடிய பெண் நிர்வாகி அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கோபம்

குஷ்பூ பாட்டு பாடிய பெண் நிர்வாகி அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கோபம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த தி.மு.க., கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், மகளிரணி நிர்வாகி மைக்கில் குஷ்பூ பாடலை பாடியதால் அமைச்சர் பொன்முடி கோபமடைந்து கடிந்து கொண்டார்.விழுப்புரத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ரவிக்குமார் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பேசிக் கொண்டிருந்த தி.மு.க., மாநில மகளிரணி பிரசாரகுழு செயலாளர் தேன்மொழி திடீரென எவ்வித சம்பந்தமும் இல்லாமல் திடீரென 'கொண்டையில் தாழம்பூ, கூடையில் வாழைப்பூ' என குஷ்பூ பாடிய சினிமா பாட்டை பாடினார்.இதனால், மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் பொன்முடி கடுப்பாகி, அந்த நிர்வாகியை அழைத்து, பேசத் தெரியாமல் மற்றவர்கள் நேரத்தை ஏன் வீணடிக்கிறாய்' என கடிந்து கொண்டார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி