விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து நடந்த தேர்தல் கூட்டத்திற்கு, மாநிலத் தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் மணி வரவேற்றார். பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு தலைவர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், த.மா.கா., தலைவர் வாசன். ஐ.ஜே.கே., பொதுச் செயலாளர் ரவி பச்சை முத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகம், இ.ம.க.மு.க., தலைவர் தேவநாதன் யாதவ், த.ம.மு.க., தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் வேட்பாளரை ஆதரித்து மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பேசினர்.பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர் சம்பத், மாவட்ட தலைவர்கள் கலிவரதன், ராஜேந்திரன், பா.ம.க., சமூக நீதிப் பேரவைத் தலைவர் பாலு, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வேலுச்சாமி, இளவழகன், மாவட்ட தலைவர்கள் புகழேந்தி , தங்க ஜோதி, அமைப்பு செயலாளர்கள் செல்வகுமார், பழனிவேல், மணிமாறன், மாவட்ட தலைவர் ராஜா, நகர செயலாளர் சங்கர். அ.தி.மு.க., மீட்பு குழு ஏழுமலை, அ.ம.மு.க., கணபதி, கோவிந்தராஜ், த.மா.கா., தசரதன், ஐ.ஜே.கே., செந்தில், புதிய நீதிக்கட்சி ரவி, மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ., நன்றி கூறினார்.