உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வட மாநிலத்தவர் முற்றுகை; கண்டமங்கலத்தில் பரபரப்பு

வட மாநிலத்தவர் முற்றுகை; கண்டமங்கலத்தில் பரபரப்பு

கண்டமங்கலம் : விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், கண்டமங்கலத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.அங்கு வைக்கப்பட்டுள்ள கட்டுமான இரும்பு பொருட்கள் அடிக்கடி திருடு போனது. நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு மர்ம நபர்கள் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள இடத்திற்கு அருகில் உள்ள இரும்பு பொருட்களை திருட முயன்றனர். அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள், திருட வந்த கும்பலை கண்டித்தனர். ஆத்திரமடைந்த அந்த கும்பல் வட மாநில தொழிலாளர்களை தாக்கி தப்பிச் சென்றது. இதுகுறித்து இரவு 11:00 மணிக்கு புகார் அளிக்க கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். அங்கு பணியில் இருந்த போலீசார், காலை வந்து கொடுக்குமாறு கூறினர். அதன்படி நேற்று காலை புகார் கொடுக்க சென்றனர். ஆனால் போலீசார் புகாரை வாங்க முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வடமாநில தொழிலாளர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, புகாரை பெற்ற போலீசார் வழக்கு பதிந்து, தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 30, 2024 05:07

ஓஹோ மர்ம நபர்கள் புரிந்தது புரிந்தது திருடுவதில் கைதேர்ந்தவர்கள் அல்லவா


மேலும் செய்திகள்