உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சியில் 28ம் தேதி தி.மு.க., செயற்குழு ஆலோசனைக் கூட்டம்

செஞ்சியில் 28ம் தேதி தி.மு.க., செயற்குழு ஆலோசனைக் கூட்டம்

செஞ்சி: செஞ்சியில் 28ம் தேதி தி.மு.க., செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். தி.மு.க., விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு ஆலோசனைக் கூட்டம் வரும் 28ம் தேதி காலை 10 மணிக்கு செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத் தலைவர் சேகர் தலைமையில் நடைபெறுகிறது.இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள்,பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் , வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் ஜூன் 3ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது குறித்தும், ஓட்டு எண்ணிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை