மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
43 minutes ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
45 minutes ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
46 minutes ago
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
51 minutes ago
விழுப்புரம் : விழுப்புரம் அருகே அனுமதியின்றி கட்சி தோரணம், கொடிகள் கட்டிய பா.ம.க., நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த சோழகனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். பா.ம.க., கிளை செயலாளராக உள்ளார். இவர், இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக, நேற்று முன்தினம் அனுமதியின்றி, சோழகனுார் மந்தக்கரை பகுதியில் பா.ம.க., கட்சி, தோரணங்களை கட்டியிருந்தார். இது குறித்த புகாரின் பேரில், காணை போலீசார், பிரகாஷ் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.இதே போல், விழுப்புரம் அடுத்த ஆசாரங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. பா.ம.க., ஒன்றிய செயலாளர். இவர், நேற்று முன்தினம், உரிய அனுமதியின்றி ஆசாரங்குப்பம் கடை வீதியில், சாலையோரம் கட்சி கொடிகளை கட்டி வைத்திருந்தார்.இதுகுறித்து, அப்பகுதி வி.ஏ.ஓ., தாஸ் கொடுத்த புகாரின் பேரில், காணை போலீசார், கிருஷ்ணமூர்த்தி மீது, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
43 minutes ago
45 minutes ago
46 minutes ago
51 minutes ago