உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மியான்மர் நாட்டை சேர்ந்த 9 பேரிடம் போலீஸ் விசாரணை

மியான்மர் நாட்டை சேர்ந்த 9 பேரிடம் போலீஸ் விசாரணை

மரக்காணம், : தனியார் கல்லுாரியில் அனுமதியின்றி பயின்ற மியான்மர் அகதிகள் 9 பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர். மியான்மர் நாட்டை சேர்ந்த 9 பேர் புதுச்சேரியில் தங்கி, வானுார் அடுத்த மாத்துாரில் உள்ள தனியார் டிப்ளமோ கல்லுாரியில், படித்து வருவதாக புதுச்சேரி குடியுரிமை அலுவலக பி.ஆர்.ஓ., ஹரீஷ் நேற்று கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில், கல்லுாரியில் படித்து வந்த தாங்சிங் முவான்,19; டிமோ தாங்,19; கல்வின் தாங்,19; பாலிராம் தாங்,19; எலிஷ்,19; குவாதாங் லியான்,19; ஜோசப்சான் சோ,19; சாலமன்,19; மோ கியாவ் ஆங்,19; ஆகியோரை போலீசார் விசாரணை செய்ததில், விசா உள்ளிட்ட ஆவணங்களின்றி அகதிகளாக வந்து கல்லுாரியில் பயில்வது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ