உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓட்டுப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி கலெக்டர் அதிரடி ஆய்வு

ஓட்டுப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி கலெக்டர் அதிரடி ஆய்வு

விழுப்புரம்: லோக்சபா தேர்தலை யொட்டி, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் லோக்சபா தேர்தல் பணிக்காக 7 சட்டசபை தொகுதிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நடந்தது.மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தலைமை தாங்கி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியை ஆய்வு செய்தார். இங்கிருந்து செஞ்சி சட்டசபை தொகுதியில் உள்ள 304 பூத்களுக்கு 364 ஓட்டுப்பதிவு கருவிகள், 364 கட்டுப்பாட்டு கருவிகள், 395 ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் கருவிகள் என மொத்தம் 1,123 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செஞ்சி தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.மயிலம் தொகுதியில் உள்ள 267 பூத்களுக்கு 320 ஓட்டுப்பதிவு கருவிகள், 320 கட்டுப்பாட்டு கருவிகள், 347 ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் கருவிகள் என மொத்தம் 987 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மயிலம் தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.அதே போல் திண்டிவனம் தொகுதிக்கு 267 பூத்களுக்கு 987 இயந்திரங்கள் அங்குள்ள தாசில்தார் அலவலகத்திற்கு, வானுார் (தனி) தொகுதியில் 278 பூத்களுக்கு 1,027 இயந்திரங்கள் இங்குள்ள தாசில்தார் அலுவலகத்திற்கும், விழுப்புரம் தொகுதியில் 289 பூத்களுக்கு 1067 இயந்திரங்கள் செஞ்சி தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள 275 பூத்களுக்கு 1017 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இங்குள்ள தாசில்தார் அலுவலகத்திற்கும், திருக்கோவிலுார் தொகுதியில் உள்ள 286 பூத்களுக்கு 1057 இயந்திரங்கள் முகையூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் பாதுகாப்பாக வைப்பதற்காக அனுப்பப்பட்டது. 7 தொகுதிகளில் உள்ள 1966 பூத்களுக்கு மொத்தம் 7,265 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அனுப்பும் பணிகள் நடந்தது. கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பெரியசாமி, கலெக்டர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை