| ADDED : ஜூலை 25, 2024 06:21 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் வேலை வாய்ப்பு முகாம் நாளை (26ம் தேதி) நடைபெற உள்ளது.விழுப்புரம் வேலைவாய்ப்பு மைய உதவி இயக்குநர் பாலமுருகன் செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாதம்தோறும் 3-ம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இதன்படி, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்திற்காக, நாளை (26ம் தேதி) விழுப்புரம் வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது.இந்த முகாமில் பாயின்ட் மேனேஜர், அசிஸ்டன்ட் மேனேஜர், பைபர் அசோசியேட், பைபர் இன்ஜினியர், டிஜிட்டல் ரிப்பேர் ஸ்பெஷலிஸ்ட், ஏர் பைபர் பிரிலேன்சர் டெக்னிசியன், ஜியோ பாய்ன்ட் லீட், மற்றும் சேல்ஸ் ஆபிசர் போன்ற பணியிடங்களுக்கு, 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களை, மாதம் ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை ஊதியத்தில், பணிக்கு தேர்வு செய்திட உள்ளனர்.இதற்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை ஆகும். இவ்வேலைவாய்ப்பு முகாமில், பகுதி நேரமாக பணிபுரிவதற்கும் தேர்வு செய்திட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உடைய விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள், 26ம் தேதி விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ள, இந்த சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, வேலைவாய்ப்பு மைய உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.