உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு

வானுார் : வானுார் அடுத்த தைலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.தமிழ்நாடு தொலைத்தொடர்பு கணக்கு மற்றும் நிதிப்பிரிவு அதிகாரிகள் நல அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த விழாவிற்கு தைலாபுரம் அரசு பள்ளி தலைமையாசிரியர் ஜெயஸ்ரீ வரவேற்றார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தலைமை தாங்கினார்.தொழிலாளர் துறை துணை ஆணையர் சந்திரகுமார், புதுச்சேரி துணை தாசில்தார் (வருவாய் வடக்கு) ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று, சிறப்புரையாற்றினர். இதில், கொந்தமூர், கண்டமங்கலம், கரசானூர், வானூர், ஓமந்தூர், தைலாபுரம் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில், கடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.2,500, ரூ.2000, ரூ.1,500 ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.தைலாபுரம் ஆசிரியர் பாமா செல்வம், அனைவருக்கும் கேடயம் பரிசாக கொடுத்து ஊக்கமளித்தார். குறைந்த வருவாய் உள்ள குடும்பத்தில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புக்களில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கல்வி உதவித்தொகையாக ரூ.1,500 வீதம் 10 பேருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அறக்கட்டளையின் அறங்காவலர்கள் சேது, சுந்தரம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை