மேலும் செய்திகள்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
31-Jul-2024
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 1.68 கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.விக்கிரவாண்டி ஒன்றியம், மதுரப்பாக்கத்தில் வருவாய் துறை சார்பில் நடந்த முகாமிற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து குறை கேட்பு மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது உடனடி தீர்வாக 480 பயனாளிகளுக்கு வருவாய் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமுக நலத்துறை சார்பில், 1 கோடியே 68 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக தாசில்தார் யுவராஜ் வரவேற்றார்.அன்னியூர் சிவா, எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயசந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் ரவிதுரை, கண்காணிப்பு குழு எத்திராசன், இளைஞரணி பாரதி, ஊராட்சி தலைவர் கஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் வினோத், மண்டல துணை தாசில்தார் தட்சிணாமூர்த்தி, தனி தாசில்தார் செந்தில்குமார், வட்ட வழங்கல் அலுவலர் பிரசாத், தேர்தல் துணை தாசில்தார் வெங்கடேசன், பி.டி.ஓ.,க்கள் பாலச்சந்திரன்,, குலோத்துங்கன், கவுன்சிலர் மகேஸ்வரி, வேளாண் உதவி இயக்குனர் கங்கா கவுரி , வருவாய் ஆய்வாளர்கள் தெய்வீகன், வினோத், நாகராஜ், ராஜலட்சுமி, வி.ஏ.ஓ., கேசன், ஊராட்சி செயலாளர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
31-Jul-2024