| ADDED : மே 15, 2024 11:42 PM
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ரெட்டணையில் இயங்கி வரும் கிரீன் பாரடைஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 30 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். இதில் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.பள்ளியில் 449 மதிப்பெண்கள் பெற்று மாணவி அர்ச்சனா முதலிடமும், மாணவர்கள் வைஷ்ணவ் 436 , செந்தில் 435 மதிப்பெண்கள் பெற்று முறையே இரண்டு மற்றும் 3ம் இடம் பெற்றனர். மேலும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 7 மாணவர்களும், 350 மதிப்பெண்களுக்கு மேல் 9 பேரும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளி துவங்கி தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்று பள்ளி சாதனை படைத்துள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சண்முகம், இயக்குனர் வனஜா சண்முகம், செயலாளர் சந்தோஷ், முதல்வர் லட்சுமி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.இது குறித்து பள்ளி தாளாளர் சண்முகம் கூறுகையில், பள்ளி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளாக பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்கு பாடுப்பட்ட, ஆசிரியர்கள், மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.