உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 2 கோவில்களில் நகை, பணம் கொள்ளை

2 கோவில்களில் நகை, பணம் கொள்ளை

மயிலம் : மயிலம் அருகே ஒரே இரவில் 2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை மற்றும் உண்டியல் காணிக்கையை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மயிலம் அடுத்த கள்ளகொளத்துார் குளக்கரை அருகே பொன்னியம்மன், ஆஞ்சநேயர் கோவில்கள் ஒரே வளாகத்தில் உள்ளன. நேற்று காலை அர்ச்சகர் கோவிலை திறக்க வந்தபோது 2 கோவில்களின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது.மேலும், உள்ளே அம்மன் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை சவரன் நகை, தங்க அலகு மற்றும் 2 கோவில்களில் இருந்த உண்டியல்களையும் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணமும் கொள்ளை போனது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ