உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துாய்மை பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊராட்சி டேங்க் ஆபரேட்டர்கள், துாய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் பணி நிரந்தர கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் முத்துக்குமரன், செயலாளர் மூர்த்தி, துணைத் தலைவர்கள் குமார், சேகர், அங்கன்வாடி சங்க மாவட்ட செயலாளர் மலர்விழி ஆகியோர் கண்டன உரையாற்றினர். சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் டேங்க் ஆபரேட்டர்கள், துாய்மைப் பணியாளர்கள், துாய்மைக் காவலர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மாத ஊதியம், நிலுவைத் தொகை வழங்க வேண்டும். பணி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை