| ADDED : மே 12, 2024 05:52 AM
திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த கொ.மணவெளி சாந்தா கிளாரா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.இப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 110 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் ரோஷினி, ரோஷ்மா 500க்கு 494, சந்தியா 492, மாணவர் குருநாதன் 490 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர். மாணவிகள் ரோஷினி, ரோஷ்மா புதுச்சேரி மாநில அளவில் 5ம் இடம் பிடித்தனர்.கணிதத்தில் 10 பேர், அறிவியலில் 2 பேர், சமூக அறிவியலில் 4 பேர் 100க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.பிளஸ் 2 தேர்வு எழுதிய 98 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவி சந்தியா 600க்கு 583, புவனேஸ்வரி 561, அபிராமி 557 மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.மேலும், 500 மதிப்பெண்ணுக்கு மேல் 28 பேர், 450க்கு மேல் 58 பேர், 400க்கு மேல் 88 பேர் எடுத்துள்ளனர். கணினி அறிவியலில் 3 பேர், வணிகவியல், கணினி பயன்பாடுகள், கணிதம், கணக்கு பதிவியல் ஆகிய பாடங்களில் தலா ஒருவர் என 100க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகி அல்பி ஜான், முதல்வர் செலினா தெரேஸ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.