உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் மாவட்ட கிரிக்கெட்  அணி தேர்வு

விழுப்புரத்தில் மாவட்ட கிரிக்கெட்  அணி தேர்வு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் அணி வீரர்களுக்கான தேர்வு வரும் 5ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான மாவட்ட அணி தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு வரும் 5ம் தேதி காலை 8.00 மணிக்கு விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகம் பின்புறத்தில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் நடக்கிறது. இதற்கான வயது தகுதி கடந்த 2010ம் ஆண்டு செப்., 1ம் தேதியோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். இதில், பங்கேற்க வரும் வீரர்கள் தங்களின் பிறப்பு சான்றிதழ், ஆதார் நகல்களை சமர்பிக்க வேண்டும். இது தொடர்பாக மேலும் விபரம் அறிய விரும்புவோர் , 9555030006, 9444509999 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை சங்க இணை செயலாளர் ரமணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ