உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிடப்பில் போட்ட சாலை பணி; குடியிருப்பு மக்கள் அவதி

கிடப்பில் போட்ட சாலை பணி; குடியிருப்பு மக்கள் அவதி

விழுப்புரம் : விழுப்புரத்தில் பாதாள சாக்கடை பணி முடிவடைந்தும் சாலை பணி கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.விழுப்புரம் நகராட்சி அலுவலகம் அருகே அபேஷா தக்கா தெருவில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, சில மாதங்களுக்கு முன் நகராட்சி மூலம் பாதாள சாக்கடை பைப் லைன்கள் அமைப்பதற்காக சாலை தோண்டப்பட்டு பணிகள் நடந்தது.இந்த பணிகள் முடிந்தபின், அங்கு புதிய சாலை போடுவதற்கான பணிகளும் துவங்கியது. பின், இப்பணிகள் முழுமை பெறாமல் நகராட்சி நிர்வாகம் பாதியிலே நிறுத்தப்பட்டது.இதனால், இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, புதிய சாலையை போடும் பணியை விரைந்து துவங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ