உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதைப் பொருட்கள் விற்பனை தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்

போதைப் பொருட்கள் விற்பனை தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்

விழுப்புரம், ;போதைப்பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் (கலால்) ராஜி, உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் சுகந்தன், மதுவிலக்கு மற்றும் அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், கலெக்டர் ரஹ்மான் பேசுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில், போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்கு அலுவலர்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு அருகில் செயல்படும் கடைகளில், போதைப் பொருட்கள் விற்பனை குறித்த ஆய்வு செய்ய வேண்டும். மேலும், போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளிடம், போதைப் பொருட்கள் தடுப்பு செயலி குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க வேண்டும்' என்றார்.கூட்டத்தில், கலால் துறை, உணவு பாதுகாப்புத் துறை, மதுவிலக்கு மற்றும் அமல்பிரிவு காவல் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sethu
மார் 04, 2025 11:00

கோமாளி ஆட்சியில் நடக்கும் கூத்து இருக்கே மிக அருமை மக்கள் மகிழ்ச்சி போதை பொருள் விற்பவனை இவர்களுக்கு கண்டிப்பாக தெரியாது மக்களே நம்புங்க .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை