உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.மயிலம் ஒன்றியம் செ.கொத்தமங்கலம் கிராமத்தில், முண்டியம்பாக்கம் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை சார்பில் நடந்த சிறப்பு பட்ட கரும்பு நடவு பயிற்சி,ஆலோசனைக் கூட்டத்திற்கு கரும்பு விரிவாக்க மேலாளர் அவிநாசிலிங்கம் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் சிறப்பு பட்ட கரும்பு நடவின் முக்கியத்துவம் பற்றியும், நவீன கரும்பு நடவு முறை, மகசூலை அதிகரிக்கும் வழிமுறைகள், உயிர் உரங்களின் பங்களிப்பு ,கரும்பு வெட்டு இயந்திரத்தின் செயல்பாடு ,கரும்பில் சொட்டுநீர் பாசன அமைப்பின் பயன்கள், அரசு மானியம் பெற வழிமுறைகள்,அகலப் பார் முறையில் கரும்பு சாகுபடி செய்து இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை பணியை செய்ய ஆலோசனை வழங்கினர்.சொட்டுநீர் பாசன அதிகாரி தேவராஜ், கரும்பு அலுவலர் சத்யநாராயணன், துணை மேலாளர் இளமுருகன், களப்பணியாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர், கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை