உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டி பகுதியில் கோடை மழை மக்கள் மகிழ்ச்சி

விக்கிரவாண்டி பகுதியில் கோடை மழை மக்கள் மகிழ்ச்சி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பகுதியில் பெய்த திடீர் கோடை மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத வகையில் இந்த ஆண்டு கடும் வெய்யில் பொதுமக்கள் விவசாயிகள் பெரும் அவதியடைந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் 2.20 மணி அளவில் கரு மேகங்கள் திரண்டு கோடை மழை பெய்ய துவங்கியது.விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதியில் இந்த மழை பிற்பகல் 3.00 மணி வரை சுமார் 40 நிமிடங்கள் மழை பெய்தது. திடீர் மழையால் பூமி குளிர்ச்சி அடைந்து குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைத்தனர். மேலும் தற்போது பயிரிட்டுள்ள மானாவாரி பயிருக்கு ஏற்ற மழை என்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை