உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கணவர் சாவில் சந்தேகம்; போலீசில் மனைவி புகார்

கணவர் சாவில் சந்தேகம்; போலீசில் மனைவி புகார்

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட்டைச் சேர்ந்த சிவக்குமார், 50; இவர் அவலுார்பேட்டையில் மங்கலம் சாலையில் உரக்கடை நடத்தி வருகிறார்.இவரது மனைவி சசிரேகா, 47; இருவருக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதால் சசிரேகா அவரது தாய் வீடான திருக்கோவிலுாரில் வசித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று காலை அவலுார்பேட்டை - சேத்பட் சாலையில் தனியார் பள்ளி அருகே சிவக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இது குறித்து அவரது மனைவி சசிரேகா, கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில், அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்