| ADDED : மே 03, 2024 11:58 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் குடும்பத்தகராறில், மனைவியிடம் தாலிச் செயின் மற்றும் நகைகளை பறித்துச் சென்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.விக்கிரவாண்டி அடுத்த ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன், 41; இவரது மனைவி அகிலா, 32; இருவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.கடந்த 2 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் அகிலா தனது 2 பிள்ளைகளுடன், விழுப்புரம் சிங்காரத்தோப்பில் உள்ள அவரது தாய் வீடான சிவகங்கை வீட்டில் வசித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி, சிங்காரத்தோப்பில் உள்ள வீட்டிற்கு வந்த சரவணன், பிள்ளைகளை பார்க்க வந்ததாக கூறி பேசியுள்ளார்.அப்போது ஏற்பட்ட தகராறில், அகிலாவைத் தாக்கி, அவரிடமிருந்த 7 சவரன் தாலிச் செயின், 1.50 லட்சம் ரூபாய், 4 சவரன் நகைகள் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளார்.இது குறித்து அகிலா அளித்த பேரில், சரவணன், அவரது உறவினரான ரமேஷ், 49; ஆகியோர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து நேற்று சரவணனை கைது செய்தனர்.