உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டம் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டம் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை மாற்றியமைத்து நடைமுறைபடுத்தக் கோரி, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் மேலாண் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில இணை செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் கோவிந்தசாமி, கணேஷ் முன்னிலை வகித்தனர். செயலாளர் சக்திவேல், பொருளாளர் ராமஜெயம் ஆகியோர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர். காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை மாற்றியமைத்து நடைமுறைபடுத்த வேண்டும். 21 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்வதோடு, இ.எஸ்.ஐ., பணி பாதுகாப்பு மற்றும் கழிவறை வசதியை வழங்கிட வேண்டும். பணியின் போது இறந்த டாஸ்மாக் ஊழியர்களின் வாரிசுக்கு பணி வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பிரசார செயலாளர் ஏழுமலை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை