உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் தீ பிடித்து எரிந்து சேதம் மரக்காணம் அருகே பரபரப்பு

கார் தீ பிடித்து எரிந்து சேதம் மரக்காணம் அருகே பரபரப்பு

மரக்காணம், : மரக்காணம் அடுத்த வங்காரம் கிராமத்தில் திடீரென கார் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.வானுார் அடுத்த ஆதனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் முத்துவேல், 28; இவர், புதுச்சேரியில் உள்ள தனியார் பைனான்சில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.நேற்று மதியம் 1:00 மணிக்கு புதுச்சேரியில் இருந்து மரக்காணம் அடுத்த வங்காரத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் வீட்டிற்கு டாடா இண்டிகா காரில் வந்துள்ளார்.அப்போது வங்காரம் அருகே காரின் முன்பகுதி திடீரென தீப்பற்றி எரிந்தது.உடன் காரில் இருந்து முத்துவேல் கீழே இறங்கி தப்பினார். காரின் அனைத்து பகுதியிலும் தீ பரவி முழுதும் எரிந்து சேதமானது.இது குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை