உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓட்டுச்சாவடியில் குளவி கூண்டு தீயணைப்பு துறையினர் அழிப்பு

ஓட்டுச்சாவடியில் குளவி கூண்டு தீயணைப்பு துறையினர் அழிப்பு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஓட்டுச்சாவடியில் குளவி அலுவலரை தாக்கியதால் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கூண்டை அழித்தனர் .விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஓட்டுச்சாவடி மையத்தின் உள்ளே புதியதாக குளவி கூண்டு கட்டியிருந்தது. இது நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு சாவடி அலுவலராக பணிபுரிந்த பிரபாகரன் என்பவரை தாக்கியது.இதனால் ஓட்டுச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது.இதையடுத்து பேரூராட்சி செயல்அலுவலர் ேஷக்லத்தீப், துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம் ஆகியோர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குளவி கூண்டை அழித்தனர்.இதன் பின்னர் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ