உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மரக்காணத்தில் ஹான்ஸ் பதுக்கி வைத்த வாலிபர் கைது

மரக்காணத்தில் ஹான்ஸ் பதுக்கி வைத்த வாலிபர் கைது

மரக்காணம்: மரக்காணத்தில் மளிகை கடையில் 75 கிலோ எடையுள்ள ஹான்ஸ், குட்கா போதை பொருட்களை பதுக்கிவைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மரக்காணம், சால்ட் ரோடில் மளிகை கடை நடத்தி வருபவர் ஆனந்தராஜ்,30; இவரது வீட்டில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போதைப் பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் நேற்று முன் தினம் இரவு இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் ஆனந்த ராஜன் மளிகை கடை மற்றும் வீட்டில் சோதனை செய்தனர். அப்பொழுது மளிகை கடை மற்றும் வீட்டில் 5 மூட்டைகளில் 75 கிலோ ஹான்ஸ், குட்கா போதை பொருட்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.அதன் பின் ஆனந்தராஜை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளுக்கு ஹான்ஸ், குட்காவை அதிகவிலைக்கு விற்பனை செய்ததாக கூறினார்.இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தராஜை கைது செய்து, அவரிடமிருந்து ஹான்ஸ், குட்காவை போலீசார் பறிமுதில் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி