உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மொபைல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

மொபைல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் மொபைல்போன் டவர் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு பணிகளை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில், சர்மிளா நகர், கட்டபொம்மன், கணபதி, திருக்குறிப்பு தொண்டர், கணபதி, பாலாஜி நகர்கள் உள்ளிட்ட பகுதியில் பலர் குடும்பங்களோடு வசிக்கின்றனர். இந்த நிலையில், சர்மிளா நகரில் தனியார் மொபைல்போன் டவர் அமைக்கும் பணிகள் நடக்கிறது. டவர் அமைக்கக்கூடாது என இங்குள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2 நாட்களாக மொபைல் டவர் அமைக்கும் பணிகள் இரவில் நடக்கிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று பணிகளை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர். டவர் அமைக்கும் தனியார் நிறுவன அலுவலர்களிடம், இந்த பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக சாலைகள் மிகவும் சேதமாகியுள்ளது. இதனால் விபத்து நடக்கிறது. குடிநீர் பிரச்னை உள்ளது. இதை பற்றி நகராட்சி நிர்வாகம் கவனிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு டவர் அமைக்க அனுமதி வழங்கியதோடு, மின்வாரியமும் மின்சாரத்தை உடனடியாக கொடுத்துள்ளதை கண்டித்து கோஷமிட்டனர். இதையடுத்து, பணியாளர்கள் தற்காலிகமாக பணிகளை நிறுத்தி விட்டு சென்றவுடன், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி