உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் அரசு கல்லுாரி மாணவர்கள் போராட்டம்

திண்டிவனம் அரசு கல்லுாரி மாணவர்கள் போராட்டம்

திண்டிவனம்: திண்டிவனம் அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் ஷிப்டு முறையை அமுல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரில் ஆரம்பத்தில் இரண்டு ஷிப்டு முறை அமலில் இருந்தது. தற்போது அரசு கல்லுாரிக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டியுள்ளதால், ஷிப்டு முறையை ரத்து செய்து விட்டு, முழு நேர வகுப்புகளாக நடத்தப்பட்டு வருகிறது.இதற்கு கல்லுாரி மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, மீண்டும் ஷப்டு முறையை கொண்டு வர வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து நேற்று காலை 10:00 மணியளவில் நுாற்றுக்கு மேற்பட்டோர் கல்லுாரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) நாராயணன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, காலை 11:30 மணிக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை